இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் முறையே ஜனவரி 25 ஆம் தேதி முதல்29 தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையும், மூன்றாவது டெஸ்ட் போட்டி முறையே பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 19 தேதி வரையும், நான்காவது டெஸ்ட் போட்டி 23-27 வரையும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி முறையே 7-11 வரையும் நடைபெற உள்ளது. இப்போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் கடும் சவாலாக உள்ளது.
இந்திலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தற்போது வரை இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் 75 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து திணறி வருகிறது. இந்திய தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டும், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.