ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எல் கிளாசிகோ என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 14) மோதுகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றனர்.
கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!
இரு அணிகளிலும் மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா கேப்டன்களாக இல்லாமல் வீரர்களாகக் களமிறங்கவுள்ளனர். கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி எல் கிளாசிகோ என அழைக்கப்படும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில் பலப்பரீட்சை மேற்கொள்கின்றனர். இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி El Classico என அழைக்கப்படுவது வழக்கம்.
‘இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!’
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.