Homeசெய்திகள்விளையாட்டுசண்டே டபுள்ஸ்...ஐபிஎல் ரசிகர்களுக்கு விருந்து - இன்று 2 லீக் போட்டிகள்!

சண்டே டபுள்ஸ்…ஐபிஎல் ரசிகர்களுக்கு விருந்து – இன்று 2 லீக் போட்டிகள்!

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இதுவரை மூன்று லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடந்தன. டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதேபோல் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மல்லுக்கட்டின. இப்போட்டியில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இதேபோல் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன.

MUST READ