ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 22 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 23வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. மொகாலியில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 23வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், ஐதராபாத் அணி 4 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியுடம் அடைந்து அந்த அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. கடைசியாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.
இதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில், இதுவரை மொத்தம் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 4 போட்டிகளில் இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி கடைசியா குஜராத் அணியுடன் மோதிய நிலையில், அந்த போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. இரண்டு அணிகளும் சரி சமமான வெற்றி தோல்வியுடன் உள்ள நிலையில், 3வது வெற்றியை பெற இரண்டு அணிகளும் தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.