spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுலக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி!

லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி!

-

- Advertisement -

லக்னோ அணியை வீழ்த்திய டெல்லி அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

we-r-hiring

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 26வது லீக் போட்டி நடைபெற்றது. லக்னோ மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 26வது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி பந்துவீசியது. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 39 ரன்னிலும் குயிண்டன் டிகாக் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ரன்னிலும் மார்கஸ் ஸ்டோனிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆயுஷ் பதோனி 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் எடுத்தது. பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 32 ரன்னிலும் டேவிட் வார்னர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஜாக் விராசர் மெகர்க் 55 ரன்னிலும் ரிஷப் பண்ட் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியின் ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ்க்கு வழங்கப்பட்டது.

MUST READ