Homeசெய்திகள்விளையாட்டுவெற்றி கணக்கை தொடங்குமா லக்னோ - பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

வெற்றி கணக்கை தொடங்குமா லக்னோ – பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

-

17வது ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறும் 11வது லீக் போட்டியில் லக்னோvsபஞ்சாப் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 11வது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று 7.30 மணிக்கு லக்னோ மைதானத்தில் நடைபெறுகிறது. லக்னோ அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்ததாவது நடைபெற்ற இரண்டாவது போட்டியில், பஞ்சாப் அணியை பெங்களூர் அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விழ்த்தியது.

இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ அணியானது 2 முறையும், பஞ்சாப் அணியானது 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியை பொறுத்தவரையில் லக்னோ அணியானது தனது முதல் வெற்றியை பெற போராடும். அதே சமயம் பஞ்சாப் அணியும் தனது இரண்டாவது வெற்றியை பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது.

MUST READ