சென்னையில் இயங்கும் சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் ஜேகே டயர் நிறுவனங்கள் இணைந்து இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டிகளை அறிவித்துள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.


தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் அட்டவணை:
1-வது சுற்று: செப்டம்பர் 11 – 13 (காரி மோட்டார் ஸ்பீட்வே, கோவை)
2-வது சுற்று: அக்டோபர் 23 – 25 (காரி மோட்டார் ஸ்பீட்வே, கோவை)
3-வது சுற்று: நவம்பர் 13 – 15 (பெங்களூரு)
இறுதிச் சுற்று: டிசம்பர் 11 – 13 (மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட், இருங்காட்டுக்கோட்டை, சென்னை)
தமிழ் ஹாக்கி லீக்: தெற்கு ரயில்வே மற்றும் SDAT அணிகள் அபார வெற்றி!
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டிகளின் முடிவுகள்:
தெற்கு ரயில்வே vs இந்தியன் வங்கி: விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தியது. தெற்கு ரயில்வே சார்பில் சண்முகம் 2 கோல்களையும், கோபிந்த் படேல் ஒரு கோலையும் அடித்தனர்.
SDAT vs வருமானவரித்துறை: மற்றொரு ஆட்டத்தில் SDAT அணி 4-2 என்ற கோல் கணக்கில் வருமானவரித் துறை அணியை தோற்கடித்தது. SDAT அணி தரப்பில் கிருஷ்ணன் 2 கோல்களையும், கௌதம் மற்றும் அரவிந்த் ஆகியோர் தலா ஒரு கோலையும் பதிவு செய்தனர்.
ஆர்.பிரக்ஞானந்தா அதிரடி வெற்றி: சின்க்ஃபீல்டு செஸ் தொடரில் முதலிடம்!
