spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!

மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!

-

- Advertisement -

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 196 ரன்கள் குவித்தது.

we-r-hiring

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 24 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 25வது லீக் போட்டி நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 25வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், மும்பை அணி 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்வியும் ஒரு வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி அணியை மும்பை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பெங்களூர் அணியை பொறுத்தவரையில், இதுவரை மொத்தம் 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 5 போட்டிகளில் 4 தோல்வியும், ஒரு வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணியை பொறுத்தவரை கடைசியாக ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடதக்கது. கடந்த போட்டியில் தோல்வியடைந்த பெங்களூர் அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாப் டூ பிளஸ்சிஸ் 61 ரன்களிலும் விராட் கோலி 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் 8 ரன்னிலும் ரஜத் படிதார் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அணியை 196 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 196 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் பந்துவீச்சு தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது.

MUST READ