spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபாரம்!

பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபாரம்!

-

- Advertisement -

 

பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபாரம்!
Photo: IPL

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 64வது லீக் போட்டி, நேற்று (மே 17) இரவு 07.30 மணிக்கு தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோஸியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

we-r-hiring

மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ!

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக, ரோஸ்சௌவ் (Rossouw) 82 ரன்களையும், ப்ரித்வி ஷா 54 ரன்களையும், வார்னர் 46 ரன்களையும் எடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!

புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ