Homeசெய்திகள்விளையாட்டுமும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ!

மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ!

-

- Advertisement -

 

மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ!
File Photo

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 63- வது லீக் போட்டி, நேற்று (மே 16) இரவு 07.30 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.

“அர்ப்பணிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறந்த எடுத்துக்காட்டு”- ரவீந்திர ஜடேஜா!

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய லக்னோ அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி.

அதைத் தொடர்ந்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

லக்னோ அணி தரப்பில் க்ருணாள் பாண்டியா 49 ரன்களையும், ஸ்டைனிஸ் 89 ரன்களையும் எடுத்துள்ளனர். அதேபோல், மும்பை அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா 37 ரன்களையும், இஷான் கிஷன் 59 ரன்களையும் எடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இரண்டு பேரை கொலீஜியம் அமைப்பு பரிந்துரை!

லக்னோ அணி 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் 14 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளது.

MUST READ