spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு27 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா…

27 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா…

-

- Advertisement -

கிரிக்கெட்டில் ராசியில்லாத அணி என கூறப்பட்டு வந்த தென்னாப்பிரிக்கா, 1998 நாக்அவுட் டிராபிக்கு பின் 27 ஆண்டுகள் கழித்து ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.கோப்பையை வென்று வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா…

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த தென்னாப்பிரிக்க இறுதிப் போட்டியில்  நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, 282 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1998-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு 27 ஆண்டுகளுகள் கழித்து கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

we-r-hiring

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்து ஆல் அவுட்டாகியது. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 207 ரன்களில் ஆல் அவுட்டாக, தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மார்க்ரமின் 136 ரன்கள் மற்றும் கேப்டன் பவுமாவின் 66 ரன்களின் உதவியுடன், 5 விக்கட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா வெற்றி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளது.

ஏலக்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை…போலீசாா் வலைவீச்சு…

MUST READ