நேரு உள்விளையாட்டு அரங்கில் 12வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 3வது கட்ட போட்டிகள் 12 அணிகளுடன் நடந்து வருகிறது.சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 12வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 3வது கட்ட போட்டிகள் 12 அணிகளுடன் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 69வது லீக் போட்டியில், தமிழ்தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. ஆரம்பத்தில் தடுமாறிய தமிழ் தலைவாஸ் பின்னர் அதிரடியாக புள்ளிகளை குவித்தது. முதல் பாதியில் 30-19 என வலுவான முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் 56-37 என தமிழ்தலைவாஸ் வெற்றிபெற்றது. கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் ரெய்டில் 26 புள்ளிகள் எடுத்தார்.
13வது போட்டியில் தமிழ்தலைவாஸ் 6வது வெற்றியை பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி-அரியானா ஸ்டீலர்ஸ் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டி 33-33 என்ற சமனில் முடிந்தது. தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக டைப் ரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் 9-3 என டெல்லி வெற்றி பெற்றது. 12வது போட்டியில் அந்த அணி 11 வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது. இன்று இரவு 8 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ், இரவு 9 மணிக்கு புனேரி பால்டன்-யு மும்பா மோதுகின்றன.
இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின விழா…கோலாகலத்துடன் கொண்டாட்டம்…
