இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தோனியின் பெயரை இணைத்து பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து, தனது கண்ணியத்துக்கும் பெயருக்கும் சேதம் விளைவித்ததாக குற்றம் சாட்டி, சம்பத்குமாருக்கு எதிராக தோனி மானநஷ்ட வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட டிவி விவாத நிகழ்ச்சியின் சிடியை எழுத்து வடிவமாக (transcription) மாற்றுவதற்கான செலவினமாக ரூ.10 லட்சம் தொகையை செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகையை வரும் மார்ச் 12ஆம் தேதிக்குள் தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு (Chief Justice’s Relief Fund) செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!


