டெல்லியில் காற்று மாசு காரணமாக இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து முன்னணி வீரர் ஆண்டன்சன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ஆன்டன்சன் இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து விலகியுள்ளாா். பேட்மிண்டன் போட்டி நடத்த தகுதியற்ற நகரம் டெல்லி என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விலகலை அறிவித்துள்ளாா்.
மேலும், அவா் உலக சாம்பியன்ஷிப் நடைபெறும் போதாவது டெல்லியில் காற்றின் தரம் சீராகும் என்று எதிர்பார்க்கிறேன் என ஆன்டன்சன் கூறியுள்ளாா். ஆன்டன்சன் போட்டியில் இருந்து விலகியதால், சர்வதேச பேட்மிண்டன் அமைப்பு 5000 டாலா்களை அபராதமாக விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெல்லியில் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாக டென்மார்க் வீராங்கனையான நியா பிப்ளிச் ஃபெல்ட்டும் கூறியுள்ளாா்.
தமிழகத்தில் இவிஎம் இயந்திரங்களில் முதல்கட்ட சரிபார்ப்பு நிறைவு


