போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என ஈரான் மறுத்திருப்பதும், ராணுவ நடவடிக்கைகள் தொடர்வதும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என அலி லாரி ஜானி தெரிவித்துள்ளாா். ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக உள்ள அவர் தனது வலைதள பதிவில் இதை தெளிவுபடுத்தியுள்ளாா்.
பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஈரான் கூறி வருவதாக அமெரிக்க பத்திரிகைகள் வெளியிட்ட செய்திக்கு அலி லாரி ஜானி மறுப்பு தெரிவித்துள்ளாா்

F-15 பேர் விமானத்தை சுட்டுவீழ்த்தியது ஈரான்.
ஈரான் மீது தாக்குதல் நடத்தச் சென்ற அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியது ஈரான் தெரிவித்துள்ளது. குவைத் வான்வெளியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம் செல்போன் டவர் மீது மோதி கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானி உயிர்தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க தரப்பில் இருந்து எவ்விதஅதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்களும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், ஈரானின் ரட்பு நாடான் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரே் ராணுவம் குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பதிலடி நடவடிக்கையாக லெபனாான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
ஈரான்–அமெரிக்கா இடையேயான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனான்–இஸ்ரேல் மோதலும் பிராந்தியத்தில் பாதுகாப்பு சிக்கலை அதிகரித்துள்ளது.
போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என ஈரான் மறுத்திருப்பதும், ராணுவ நடவடிக்கைகள் தொடர்வதும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் – வெளிப்படையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆதரவு!


