தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட சரிபார்ப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்பட உள்ள 1.75 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.16 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் மற்றும் 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றில் முதல்கட்ட தொழில்நுட்ப சரிபார்ப்பு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த சரிபார்ப்பு பணிகள், தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பெல் (BEL) நிறுவனத்தின் திறமையான பொறியாளர்கள் இந்த தொழில்நுட்ப சோதனை பணிகளை கவனமாக மேற்கொண்டனர்.
இயந்திரங்கள் சரியாக செயல்படுகின்றனவா, எந்தவித தொழில்நுட்ப குறைபாடுகளும் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு கட்டங்களாக இந்த முதல்கட்ட சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டதாக தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த முதல்கட்ட சரிபார்ப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்ட சரிபார்ப்புகள் மற்றும் தேர்தல் பணிகள் திட்டமிட்ட கால அட்டவணைப்படி முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்… உயிரிழப்பு 2500 ஆக உயர்வு!!


