spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅறிவியல் வரலாற்றில் பிப்ரவரி 28 என்பது வெறும் காலண்டர் தேதியல்ல - சு.வெங்கேடசன் எம்.பி.

அறிவியல் வரலாற்றில் பிப்ரவரி 28 என்பது வெறும் காலண்டர் தேதியல்ல – சு.வெங்கேடசன் எம்.பி.

-

- Advertisement -

இந்தியாவின் அறிவியல் வரலாற்றில் பிப்ரவரி 28 என்பது வெறும் காலண்டர் தேதியல்ல; தேசத்தின் அறிவுசார் சுதந்திரத்தையும், உலகளாவிய அறிவியல் தளத்தில் இந்தியா நிலைநாட்டிய மேன்மையையும் பறைசாற்றும் நாளாகும் என சு.வெங்கேடசன் எம்.பி. கூறியுள்ளாா்.அறிவியல் வரலாற்றில் பிப்ரவரி 28 என்பது வெறும் காலண்டர் தேதியல்ல - சு.வெங்கேடசன் எம்.பி.  இது சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “1928-ம் ஆண்டு இதே நாளில் இந்தியாவின் மிகச்சிறந்த இயற்பியல் அறிஞர் சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்கள் ‘ராமன் விளைவு’ (Raman Effect) என்ற தனது புரட்சிகரமான கண்டுபிடிப்பை உலகிற்கு அறிவித்தார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் “தேசிய அறிவியல் தினமாகக்” கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கூடுதல் முக்கியத்துவம் வானில் ஒரு அரிய நிகழ்வாக ‘ஆறு கோள்களின் அணிவகுப்பு’ (Parade of Six Planets) நிகழவிருக்கிறது. தேசிய அறிவியல் தினத்தின் உண்மையான வெற்றி என்பது ஒரு கண்டுபிடிப்பைக் கொண்டாடுவதில் மட்டுமல்ல, மாறாக மக்களிடையே ‘அறிவியல் மனப்பான்மையை’ (Scientific Temper) உருவாக்குவதில் உள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 51A(h) சட்டப்பிரிவு, ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம் மற்றும் தேடல் உணர்வை வளர்ப்பதை அடிப்படை கடமையாக வலியுறுத்துகிறது ‘அறிவியல் மனப்பான்மை’ என்பது ஆய்வகங்களுடன் மட்டும் தொடர்புடையது அல்ல; இது அன்றாட வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையாக இருக்க வேண்டும். மூடநம்பிக்கைகள், ஆதாரமற்ற நம்பிக்கைகள் மற்றும் போலியான அறிவியல் (Pseudoscience) ஆகியவற்றிற்கு எதிரான ஒரு ஆயுதமாக இருக்க வேண்டும்.  சர் சி.வி. ராமன் கூறியது போல, “அறிவியல் என்பது உண்மைக்கான தேடல்; அந்தத் தேடல் முடிவற்றது” என சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளாா்.

இறை பற்றாளரகளும் விரும்பக்கூடிய அரசு திராவிட மாடல் அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

we-r-hiring

MUST READ