spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉலக நாடுகளால் கௌரவிக்கப்படும் நம் பாரதப் பிரதமர் – நயினார் நகேந்திரன் பெருமிதம்

உலக நாடுகளால் கௌரவிக்கப்படும் நம் பாரதப் பிரதமர் – நயினார் நகேந்திரன் பெருமிதம்

-

- Advertisement -

அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதான “ஸ்பீக்கர் ஆஃப் தி நெசெட்” பதக்கம் வழங்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாா்.உலக நாடுகளால் கௌரவிக்கப்படும் நம் பாரதப் பிரதமர் – நயினார் நகேந்திரன் பெருமிதம்இது குறித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த 2018 ஆம் ஆண்டு பாலஸ்தீனம் சென்றபோது, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு அந்நாட்டின் உயரிய ‘கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன்’விருது வழங்கப்பட்ட நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாடாளுமன்ற விருது மூலம், பகை நாடுகளாகக் கருதப்படும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே உலகத் தலைவர் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்படி, உலக நாடுகள் அனைத்துடனும் நட்பு பாராட்டி, அவற்றின் பெரு நம்பிக்கையைப் பெற்று, உலக அரங்கில் பெரிதும் கௌரவிக்கப்படும் நமது மாண்புமிகு பிரதமர் விஸ்வகுரு என்றழைப்பது மிகப் பொருத்தமானதே!” என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 கூடுதலாக வழங்கப்படும் – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

we-r-hiring

MUST READ