spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் – அன்புமணி

ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் – அன்புமணி

-

- Advertisement -

ஆஷா எனும் அற்புத சாதனை! நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம் கொண்டாடும் போது, அது சார்ந்த மலரும் நினைவுகளை மனதில் ஓட்டிப் பார்ப்பதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது என அன்புமணி தெரிவித்துள்ளாா்.ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் – அன்புமணி இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றிய போது இந்தியாவில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நான் அறிமுகப்படுத்திய ஆஷா(Accredited Social Health Activist – ASHA) திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் ஆஷா என்ற மராத்திய திரைப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பார்த்த போது எனக்கு அதே உணர்வு தான் ஏற்பட்டது. ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் ஆகும்.

இது 2005 ஆம் ஆண்டில் நான் அறிமுகப்படுத்திய உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கம் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் பயிற்சி பெற்ற சுகாதாரப் பெண் பணியாளர் ஒருவரையாவது நியமிக்க வேண்டும் என்பது தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் அடிப்படை விதி ஆகும். இந்த விதியை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர்கள் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியா முழுவதும் 10 லட்சம் ஆஷாக்கள் பணியாற்றி வருகின்றனர். கருவுற்ற பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் ஐயங்களையும், அச்சத்தையும் போக்க வேண்டுமா? அவர்களுக்கு நுண்ணூட்டச் சத்து மற்றும் துப்புரவு தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டுமா? கருவுற்ற பெண்களை குறித்த காலத்தில் மருத்துமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா? பிறந்த குழந்தைகளின் உடல் நலத்தைக் காக்க வேண்டுமா? குறித்த காலத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதை உறுதி செய்ய வேண்டுமா? அனைத்தையும் ஆஷாக்கள் பார்த்துக் கொள்வார்கள். அவர்களின் துடிப்பான பணிகளால் தான் இன்று 100% பிரசவங்களும் மருத்துமனைகளில் நடைபெறுகின்றன; தாய்மார்கள் இறப்பு விகிதம் 60 விழுக்காடும், குழந்தைகள் இறப்பு விகிதம் 80 விழுக்காடும் குறைந்துள்ளன.

we-r-hiring

ஆஷா பணியாளர்களின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு உலக சுகாதார தலைவர்கள் விருதை உலக சுகாதார நிறுவனம் வழங்கிப் பாராட்டியிருக்கிறது. இவ்வளவு சிறப்பு மிக்க ஆஷா திட்டத்தை கதைக்களமாக வைத்து ஆஷா திரைப்படத்தை தயாரித்த அதன் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அன்புமணி தெரிவித்துள்ளாா்.

உலக நாடுகளால் கௌரவிக்கப்படும் நம் பாரதப் பிரதமர் – நயினார் நகேந்திரன் பெருமிதம்

MUST READ