Homeசெய்திகள்தமிழ்நாடுவழக்கை இழுத்தடித்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு...

வழக்கை இழுத்தடித்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி மற்றும் போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு முறைகேடு வழக்கில், நீதிமன்ற விசாரணையைத் தேவையின்றி தாமதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வழக்கை இழுத்தடித்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி என். லோகேஸ்வரன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

we-r-hiring

2011–2015 காலகட்டத்தில் வேலைவாய்ப்பு மோசடி புகார்!

கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் 2,200-க்கும் மேற்பட்டோர் தொடர்புடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்வது குறித்து நீதிபதி கேள்வி!

இந்த வழக்கு இன்று குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஒவ்வொருவரும் தங்களது விருப்பப்படி தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

ஜாமீனை ரத்து செய்ய நேரிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை!

மேலும், நீதிமன்ற விசாரணையைத் தேவையின்றி இழுத்தடிக்கும் வகையில் செயல்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்ய நேரிடும் என்றும் நீதிபதி கடுமையாக எச்சரித்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர். அவர்களது தரப்பில் விரைவில் மனுக்கள் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட முடியாது; இது சினிமா அல்ல! – தவறு செய்தவர்களுக்கு ‘தீபாவளி பரிசா?’ என முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

MUST READ