spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஈரான் - இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம்….மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்….

ஈரான் – இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம்….மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்….

-

- Advertisement -

இஸ்ரேல் தாக்குதலை அடுத்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.ஈரான் - இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம்….மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்….

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் தெஹ்ரான் முழுவதும் வெடிகுண்டு சத்தம் எதிரொலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

குறிப்பாக தலைநகரின் முக்கிய தளங்கள் மீது எவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பின்னர் பல கட்டிடங்களில் தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஈரான் அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, ஈரான் அருகே அமெரிக்கா தனது படைகளை குவித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியிருப்பது மேற்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரான் மட்டுமன்றி தெற்கு லெபனான் பகுதிகளிலும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பிராந்திய அளவில் மோதல் விரிவடையும் அபாயம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல் உருவாகும் சூழல் காணப்படுவதால், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!! 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை ட்ரம்ப் அனுப்பியுள்ளார்

MUST READ