Homeசெய்திகள்இந்தியாமும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம்...

மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?

-

- Advertisement -

“24,000 பேர் பேசும் மொழிக்கு 6,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களா?” — நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சி புள்ளிவிவரத்தால் தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு!மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?

நாடு முழுவதும் இயங்கி வரும் ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) மாதிரிப் பள்ளிகளில், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களால் பேசப்படும் சமஸ்கிருத மொழிக்கு 6,102 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், சுமார் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் தமிழ் மொழியைக் கற்பிக்க வெறும் 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

we-r-hiring

மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் அளித்துள்ள இந்த எழுத்துப்பூர்வப் பதில், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையில் வெளியான புள்ளிவிவரங்கள்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், நாடு முழுவதும் இயங்கும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் மற்றும் அங்கு இந்தி அல்லாத பிற மொழிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்கள் குறித்து சு. வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பிருந்தார்.

இதற்கு ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள், இந்தியாவில் தற்போது வரை 13,092 பள்ளிகள் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில், நாடு முழுவதிலும் உள்ள இப்பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்காக மட்டும் 6,102 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் கோடிக்கணக்கான மக்கள் பேசும் தமிழ் மொழியைக் கற்பிக்க நாடு முழுவதும் வெறும் 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளாா். மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?

பள்ளிகளின் எண்ணிக்கையை விட அதிகமான சமஸ்கிருத ஆசிரியர்கள்!
குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

மாநில அளவிலான புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 944 பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு, பள்ளிகளின் எண்ணிக்கையையும் தாண்டி 1,211 சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, அம்மாநிலத்தில் ஒரு பள்ளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலை நிலவுகிறது. இதேபோல பிற மாநிலங்களான ராஜஸ்தானில் 768, ஒடிசாவில் 738, பீகாரில் 736 எனப் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் சமஸ்கிருத ஆசிரியர்களே பெருமளவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், இத்திட்டத்தின் கீழ் இயங்கும் 36 பள்ளிகளில் 41 சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தாய்மொழியான தமிழ் மொழியைக் கற்பிக்க வெறும் 12 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?

“சாக்கிற்குள் ஒளிந்திருக்கும் பூனை அம்பலமாகிவிட்டது!” — சு. வெங்கடேசன் எம்பி சாடல்
இந்தத் தரவுகளைச் சுட்டிக்காட்டித் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ள எம்பி சு. வெங்கடேசன், “2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கு 6,102 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் தமிழ் மொழியைக் கற்பிக்க 12 ஆசிரியர்களா? ‘மும்மொழிக் கொள்கை என்பது மாநில மொழிகளை வளர்ப்பதற்கே’ என ஒன்றிய அரசு கூறி வந்த பொய்யை இந்தப் புள்ளிவிவரம் தோலுரித்துக் காட்டியுள்ளது. மும்மொழி என்பதும், மாநில மொழிகள் ஊக்குவிப்பு என்பதும் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பிற்கான ஏமாற்று வேலையே ஆகும். சாக்குக்குள் ஒளிந்திருந்த பூனை இப்போது தெளிவாக அம்பலமாகிவிட்டது.” என  சு. வெங்கடேசன் தெரவித்துள்ளாா்.

சுழன்றடிக்கும் விவாதங்கள்
மத்திய அரசால் மாதிரிகளாக உயர்த்தப்படும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளில், பிற தொன்மையான மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டு சமஸ்கிருதத்திற்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவது, இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மொழியியல் சமத்துவத்திற்கும் எதிரானது என அரசியல் தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

“உணவளித்ததற்காக உறவினர்களைப் பிடித்துச் சென்று துன்புறுத்தினர்” — காசியாபாத் காவல்துறைக்கு எதிராக ஜூனைத் மாலிக் மனு!

MUST READ