Homeசெய்திகள்இந்தியாஅலுவலக மேசை மீது நாய்க்குட்டிகள்... மகாராஷ்டிராவில் தெருநாய் தொல்லையைக் கண்டித்து ’யுவ சேனா’ அமைப்பினர் நூதனப்...

அலுவலக மேசை மீது நாய்க்குட்டிகள்… மகாராஷ்டிராவில் தெருநாய் தொல்லையைக் கண்டித்து ’யுவ சேனா’ அமைப்பினர் நூதனப் போராட்டம்!

-

- Advertisement -

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களும் குழந்தைகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாகப் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.அலுவலக மேசை மீது நாய்க்குட்டிகள்... மகாராஷ்டிராவில் தெருநாய் தொல்லையைக் கண்டித்து ’யுவ சேனா’ அமைப்பினர் நூதனப் போராட்டம்!

இந்த நிலையில், நிபாட் நகரில் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசு நிர்வாகத்தைக் கண்டித்து, ‘யுவ சேனா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் நூதனப் போராட்டத்தில் குதித்தனர்.

we-r-hiring

அலுவலக மேசை மீது நாய்க்குட்டிகள்
யுவ சேனா அமைப்பின் மாவட்டத் தலைவர் விக்ரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென நிபாட் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் தாங்கள் சாக்குப் பைகளில் பிடித்து வந்த 3 நாய்க்குட்டிகளை அலுவலக மேசை மீது அவிழ்த்துவிட்டனர். அலுவலகத்திற்குள் திடீரென நாய்க்குட்டிகள் விடப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயினர். தெருநாய் தொல்லை விவகாரத்தில் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கும் வகையிலேயே தாங்கள் இந்த விசித்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக யுவ சேனா அமைப்பினர் தெரிவித்தனர்.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
போராட்டத்தின் முடிவில் பேசிய அமைப்பினர், தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த அரசு நிர்வாகம் உடனடியாக முறையான மற்றும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இந்தச் சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படவில்லை என்றால், பொதுமக்களைத் திரட்டி மிகப் பெரிய அளவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். தற்போது இந்த நூதனப் போராட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்யமான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மம்தா பானர்ஜி அதிரடி முடிவு: இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகல்; தேசிய அரசியலில் கவனம் செலுத்த திட்டம்

MUST READ