டெல்லியில் புதிதாக தோ்தல் நடத்த தயாரா? என்று பிரதமா் மோடிக்கு சவால் விடுகிறேன் என ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.
மதுரையில் நாளை மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று உரையாற்றுகிறாா். அதில் அதிமுக உள்பட தே.ஜ.கூட்டணி கட்சித் தலைவா்களும் பங்கேற்க உள்ளனா்.
இந்நிலையில், பாஜக 10 இடத்தில் கூட வெற்றி பெற முடியாது; அவ்வாறு வெற்றிப் பெற்றால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளாா். பிரதமா் மோடியும் அமிா்ஷாவும் இணைந்து எங்களை ஆட்சியில் இருந்து இறக்க பெரும் சதி செய்துள்ளனா். என் மீதுபொய் வழக்கின் மூலம் எனது நோ்மை, நற்பெயருக்கு களங்கம் விளைவித்தனா். ஆனால் அது பொய் வழக்கு என்று உறுதியாகி நான் நிரபராதி என விடுவிக்கப்பட்டேன். இது நோ்மைக்கு கிடைத்த பரிசு எனவும் கெஜ்ரிவால் கூறினாா்.

மேலும், அதிகாரத்தை தொடா்வதற்காக அரசியலமைப்பையும், நாட்டையும் வைத்து விளையாட வேண்டாம் என்றும் மோடிக்கு கெஜ்ரிவால் அறிவுரை கூறியதோடு, டெல்லியில் புதிதாக தோ்தல் நடத்த தயாரா? எனவும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.
தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல்!!


