பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு கொடுத்து நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் 11 விமான நிலையங்களை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது.
ஒன்றிய அரசு பொதுத்துறை சொத்துக்களை பணமாக்கும் (Asset Monitation)த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் கோவை சர்வதேச விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற விமான நிலயங்கள்,

லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம், ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையம், பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம்,தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம், ஸ்வாமி விவேகானந்த விமான நிலையம், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம்,பிர்சா முண்டா விமான நிலையம், ஜோத்பூர் விமான நிலையம்,கயா விமான நிலையம் ஆகிய விமான நிலையங்களையும் தனியாருக்கு விற்க முடிவு.
இந்த 11 விமான நிலையங்களையும் நீண்ட கால குத்தகை முறையில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க திட்டமிட்ப்பட்டுள்ளது.
விமான நிலயங்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டாலும், நில உரிமை மத்திய அரசு வசமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களின் பரமாரிப்பு, மேம்பாடு, வருவாய் வசூல் போன்ற பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
மேலும், விமான நிலையங்கள் தனியார்வசம் சென்றால் விமான நிலைய பயன்பாட்டு கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தனியார் மயமாக்கள் மூலம் 5 ஆண்டுகளில் ரூ.27,500 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பொதுத்துறை சொத்துகளை தனியாருக்கு கொடுத்து நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.13,500 கோடி இலங்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 2 ஆம் கட்ட திட்டத்தில் அந்த இலக்கு இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
”பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம்” இந்த ஒப்பந்தமே – ராகுல் காந்தி சாடல்


