Homeசெய்திகள்இந்தியாமேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 3 குழந்தைகள் உட்பட 4...

மேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

-

- Advertisement -

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், திறந்திருந்த ரயில்வே கேட் வழியாக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது புறநகர் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரயில்

we-r-hiring

காலை நேரத்தில் நிகழ்ந்த கொடூரம்:

முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கோவிந்த்பூர் ரயில்வே கிராசிங் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பள்ளிப் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு பலர் அமரும் கார் (School Van/Car) ஒன்று பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த புறநகர் ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது அதிவேகமாக மோதியது.

துடிதுடித்து பறிபோன உயிர்கள்:

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 பள்ளி மாணவர்களும், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற உள்ளூர் நபர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினரும் உள்ளூர் மக்களும், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரயில்வே ஊழியர்களின் அலட்சியமே காரணமா?

விபத்தை நேரில் கண்ட உள்ளூர் மக்கள் அதிர்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளனர். ஹவுரா நோக்கிச் சென்ற ‘நவத்வீப் எக்ஸ்பிரஸ்’ ரயில் கடந்து சென்ற பிறகும், அங்கிருந்த ரயில்வே கேட் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே இருந்துள்ளது.

கேட் திறந்திருந்ததால் ஆபத்தை உணராத பள்ளி கார் ஓட்டுநரும், மிதிவண்டியில் வந்த உள்ளூர் நபரும் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். ஆனால், அதே நேரத்தில் எதிர்பாராத விதமாக மற்றொரு தண்டவாளத்தில் வந்த புறநகர் ரயில் அவர்கள் மீது மோதி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே ஊழியர்களின் இந்த அலட்சியப் போக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த அலட்சிய விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ