Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

-

- Advertisement -

இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய புரட்சியாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் அதிநவீன ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பிரதமர்

we-r-hiring

ரூ. 26,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்:

அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரு மாநிலங்களின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சுமார் ரூ. 26,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கியும் வைக்கிறார். அதன் ஒரு பகுதியாகவே இந்த ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஜிந்த் – சோனிபட் இடையே உலக சாதனை ரயில்:

அரியானா மாநிலத்தின் ‘ஜிந்த்’ ரயில் நிலையத்திலிருந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைட்ரஜன் ரயில் சேவையைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஜிந்த் – சோனிபட் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படவுள்ளது. சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் பசுமை ஆற்றல் மூலம் இயங்கும் இந்த ரயில், உலகின் மிக நீளமான மற்றும் அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அம்ரித் பாரத் திட்டம்: 75 ரயில் நிலையங்கள் புதுப்பிப்பு:

ரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் மத்திய அரசின் ‘அம்ரித் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களைப் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தமிழகத்திற்கு கிடைத்த பெருமை:

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 முக்கிய ரயில் நிலையங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டின் சென்னை பூங்கா (Chennai Park), சின்னசேலம் மற்றும் குன்னூர் ஆகிய ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதிவேகப் பயணத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில் திட்டம், இந்தியப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

MUST READ