spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா”பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம்” இந்த ஒப்பந்தமே – ராகுல் காந்தி சாடல்

”பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம்” இந்த ஒப்பந்தமே – ராகுல் காந்தி சாடல்

-

- Advertisement -

ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆயுதம் ஆக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம் இந்தியா – அமெரிக்க வர்த்த ஒப்பந்தம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியள்ளாா்.”பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம்” இந்த ஒப்பந்தமே – ராகுல் காந்தி சாடல்ஒன்றிய பட்ஜெட்டின் மீதான விவாதத்தில் மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளாா். அவையில் தமக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய அம்சங்கள் குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.

உலக அரசியல் சூழ்நிலையை சுட்டிக்காட்டிய அவர், “போர் சூழல் ஓய்ந்துவிட்டது” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு  மறுப்பு தெரிவித்தா். அமெரிக்காவின் ஆதிக்கத்தை சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வரும் நிலையில், உலகின் பல பகுதிகளில் மோதல் அபாயம் நீடித்துக் கொண்டிருப்பதாக கூறினார். எரிசக்தி மற்றும் பொருளாதாரம் ஆயுதமாக பயன்படுத்தப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

we-r-hiring

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இந்திய நிறுவனங்களுக்கு சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “இந்தியாவின் மிகப்பெரிய பலமே 140 கோடி மக்களும், அவர்களின் தரவுகளும் தான். ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் எரிபொருள் மக்களின் தகவல்களே” என்று வலியுறுத்திய அவர், தரவு பாதுகாப்பு மற்றும் சமநிலையான கொள்கைகள் அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

எரிசக்தி மற்றும் பொருளாதாரத்தை ஆயுதமாக்கும் பிரச்சனைகளுக்கு இந்த பட்ஜெட்டில் தீர்வு காணப்படவில்லை என்றும், தற்போதைய பொருளாதார சவால்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பட்ஜெட் அமையவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அமெரிக்க டாலரின் வலிமையைத் தக்கவைத்துக் கொள்ள இந்தியாவின் தரவுகள் அவசியம் என கூறிய அவர், சமநிலையான வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றாா்.

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, இந்தியா ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க உறுதி அளித்துள்ளதாகவும், அதற்கு பதிலாக அமெரிக்கா எந்த உறுதியும் வழங்கவில்லை என்றும், ஆரம்பத்தில் 3% இருந்த சராசரி வரி 16% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வங்கதேசத்திற்கு குறைந்த வரி விதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு 18% வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். “இந்திய ஜவுளித்துறையின் நிலை என்னவாகும்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், 20 ஆண்டுகளுக்கு வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியா எங்கிருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதையும் அமெரிக்கா தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம் இந்த ஒப்பந்தமே” என்றார்.

அமெரிக்காவின் இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயத் துறை இந்திய விவசாயிகளை பாதிக்கக்கூடும் என்றும், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எதிரானதாக அமையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். 140 கோடி இந்தியர்களின் எதிர்காலம் அமெரிக்காவிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி அழுத்தத்தின் காரணமாகவே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கலாம் என்றும் குற்றம்சாட்டினார்.

உரையின்போது எப்ஸ்டீன் கோப்புகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். அவைத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேசமாட்டேன் என விளக்கம் அளித்தார். அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிரதமரை குறிவைத்தே பதிவு செய்யப்பட்டதாகவும், அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது.

அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 4,600 டாலரிலிருந்து 14,600 டாலராக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில், இந்தியாவின் தரவு பாதுகாப்பு, எரிசக்தி சுயாட்சி, விவசாயிகள் மற்றும் ஜவுளித்துறை எதிர்கொள்ளும் சவால்கள், இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவுகள் ஆகியவை ராகுல் காந்தியின் உரையின் மையப்புள்ளிகளாக அமைந்தன.

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! டிரம்பிடம் அடி பணிந்த மோடி! ஜெகத் காஸ்பர் நேர்காணல்!

MUST READ