spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!!

தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!!

-

- Advertisement -

காப்பீட்டு பணத்திற்காக அண்ணணை லாரி ஏற்றி கொன்ற  தம்பியால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!! தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தின் ராமடுகு பகுதியை சேர்ந்த மங்கோடி நர்சய்யாவுக்கு, மங்கோடி வெங்கடேஷ் (37) மற்றும் மங்கோடி நரேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். வெங்கடேஷ்க்கு திருமணமாகவில்லை. அவரது மனநிலையும் சரியில்லை. நரேஷ் இரண்டு டிப்பர் வாங்கி வாடகைவிட்டும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். இதில் ரூ.1.50 கோடி நஷ்டம் கடன் ஏற்பட்டது.  கடனை அடைக்க தனது அண்ணன்  வெங்கடேஷ்  பெயரில் பல்வேறு காப்பீட்டு நிறுவனத்தில் ரூ. 4.14 கோடி மதிப்புள்ள காப்பீடு எடுத்தார்.  வெங்கடேஷ் இறந்தால், காப்பீட்டுத் தொகை கிடைக்கும் இதன் மூலம் கடனை அடைத்து விடலாம் என  வெங்கடேஷைக் கொல்லத் திட்டமிட்டார்.

இதற்காக நரேஷ் தனது நண்பர் நமுண்ட்லா ராகேஷுக்கும் ரூ 7.50 லட்சம் கடன் கொடுக்க வேண்டி உள்ளதால், கொலைக்கு ஒத்துழைத்தால் கடன் தொகையுடன் சேர்த்து ரூ.13 லட்சம் தருவதாக  கூறினார். டிப்பர் டிரைவர் முனிகலா பிரதீப்பிற்கு ரூ.2 லட்சம் தருவதாகவும் இந்த திட்டம் வெளியே தெரிந்தால் அனைவரும் சிறைக்கு செல்வோம் என வீடியோ எடுத்து கொண்டு வெங்கடேஷைக் கொல்ல முடிவு செய்தார். திட்டமிட்டப்படி நவம்பர் 29 ஆம் தேதி இரவு, நரேஷ் தனது டிப்பரில் மண்ணை நிரப்பிவிட்டு திரும்பி வருமாறு ஓட்டுநர் பிரதீப்பிடம் கூறினார். இரவு 10:30 மணிக்கு ராமதுகுவின் புறநகர்ப் பகுதியை டிப்பர் வந்தவுடன், பிரதீப் நரேஷை அழைத்து, முன்கூட்டியே செய்த திட்டத்தின்படி வாகனம் பழுதடைந்ததாகக் கூறினார்.

we-r-hiring

நரேஷ் உடனடியாக வெங்கடேஷுக்கு ஒரு ஜாக்கியைக் கொடுத்து  ஸ்கூட்டியில் டிப்பர் இருக்கும் இடத்திற்கு அனுப்பினார். அதன் பிறகு, நரேஷ் தனது நண்பர் ராகேஷுடன் வேறொரு வாகனத்தில் சென்றார்.  வெங்கடேஷிடம் ஜாக்கியை லாரி டயருக்கு அடியில் வைக்கச் சொன்னார். வெங்கடேஷ் ஜாக்கியை டயருக்கு அடியில் வைத்து திருப்பிக் கொண்டிருந்தபோது, ​​நரேஷ் டிப்பரை முன்னோக்கி ஓட்டி சொல்ல கூறியதால், டிரைவர் பிரதீப் டிப்பரை முன்னோக்கி ஓட்டியதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் நரேஷ் தனது குடும்பத்தினரிடமும், போலீசாரிடமும் டிப்பர் ஓட்டுநர் பிரதீப்பின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததாகவும், வெங்கடேஷ் இறந்துவிட்டதாகவும் கூறினார். அதே நேரத்தில் இரண்டு நாட்கள் கழித்து காப்பீட்டு நிறுவனத்தினர் இந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்ததால் போலீசார் சந்தேகமடைந்து அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் நரேஷ் வீட்டில் இருந்து காப்பீட்டு பத்திரம் மற்றும் மூவரும் சேர்ந்து திட்டமிட்ட வீடியோ பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் காப்பீட்டு பணத்திற்காக வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நரேஷ் அவரது நண்பர் ராகேஷ், டிப்பர் லாரி டிரைவர் பிரதீப் ஆகியோரை  போலீசார் கைது செய்ததாக காவல் ஆணையர் கவுஸ் ஆலம் தெரிவித்தார்.

குழந்தையில்லாத பெற்றோரின் ஏக்கத்தை பயன்படுத்தி பண மோசடி!! வாலிபர் கைது…

MUST READ