spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!

சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!

-

- Advertisement -

திருமுடிவாக்கம் பகுதியில் மூட்டை மூட்டையாக கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனா்.சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!

சென்னை, குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட  குட்கா போதை  பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை  பகுதியில் போலீசாா் ரகசியமாக சென்று கண்காணித்து வந்த நிலையில்,  கர்நாடக மாநில  வண்டி எண் கொண்ட கண்டெய்னர் லாரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த லோடு வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் சிலர் கண்டெய்னர் லாரி  வாகனத்தில் இருந்து லோடு ஆட்டோவிற்கு முட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!
அப்போது அங்கு சென்ற போலீசாரை  பார்த்தபோது அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .பின்னர்  இரண்டு வாகனங்களையும் கைப்பற்றி சோதனை செய்தபோது அவற்றில் மூட்டை மூட்டையாக கோணி மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 2700 கிலோ இருந்தது தெரிய வந்தது. பின்னா் இரண்டு வாகனங்களையும் போலீசாா் காவல் நிலையம் எடுத்து வந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!
குறிப்பாக தப்பி ஓடிய நபர்களை தேடுவதற்காக இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் தொடர்புடைய முக்கிய நபர்கள் யார் என்பது குறித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

we-r-hiring

MUST READ