நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அந்நிறுவனத்தின் சொத்துகளை ஏலம் விட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மக்களிடம் அதிக வட்டி வழங்குவதாக கூறி முதலீடு பெறப்பட்டு ரூ.6,727 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக நியோமேக்ஸ் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோசடியைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையாக, நிறுவனத்தின் சொத்துகளை ஏலம் விட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிக வருமானம் கிடைக்கும் என கூறி பலரிடம் முதலீடு பெறப்பட்டதாகவும், பின்னர் அந்த தொகைகளை திருப்பி வழங்காமல் மோசடி செய்ததாகவும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து நிறுவனத்தின் சொத்துகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், மொத்தம் ரூ.6,727 கோடி அளவுக்கு மோசடி நடந்தது கண்டறியப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 10,158 காலி மனைகளை ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஏல நடவடிக்கை மார்ச் 17ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏலத்தில் கிடைக்கும் தொகையை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களின் ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிதி நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு எடுத்த நடவடிக்கையை நீதிபதி சக்கரவர்த்தி பாராட்டியுள்ளாா்.
மேலும், நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வழி உருவாகியுள்ளது.
காலையில் திருமணம், மாலையில் கொலை? பிண்ணனி என்ன? விசாரணையில் போலீசார்…


