Homeசெய்திகள்க்ரைம்நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

-

- Advertisement -

விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் காணவும் ஏர் இந்தியா வழங்கிய ‘இலவச வை-பை’ (Wi-Fi) வசதியை, கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் (1 மில்லியன்) பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

we-r-hiring

முன்பெல்லாம் விமானத்தில் ஏறியவுடன் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டியிருந்த நிலையில், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விமானங்கள் பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போதும் வை-பை வசதியைப் பயன்படுத்தும் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் இந்திய நிலவரம்:
வெளிநாடுகளில் தொடக்கம்: 2003-இல் ஜெர்மனியின் லுப்தான்ஷா நிறுவனத்தில் தொடங்கி அமெரிக்கா (2008), ஐக்கிய அரபு அமீரகம் (2010), பிரிட்டன் (2017) எனப் பல்வேறு நாடுகளில் இத்திட்டம் அமலுக்கு வந்தது.இந்தியாவில் அறிமுகம், இந்தியாவில் முதன்முறையாக 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாடுகளுக்குச் செல்லும் குறிப்பிட்ட வழித்தடங்களில் இந்த வை-பை வசதியை இலவசமாக அறிமுகப்படுத்தியது.

தற்போதைய பயன்பாடு, லண்டன், நியூயார்க், நியூஜெர்சி, பிராங்பர்ட், மெல்போர்ன், பாலி, மணிலா, சிங்கப்பூர், ஹாங்காங், மொரிசியஸ் உள்ளிட்ட 28 சர்வதேச வழித்தடங்களில் இது பயன்பாட்டில் உள்ளது.

ஓராண்டில் அபார வளர்ச்சி (புள்ளிவிவரங்கள்):
பயன்பாட்டு உயர்வு: 2025 ஜூன் மாதத்தில் 30 சதவீதமாக இருந்த பயணிகள் பயன்பாடு, 2026 ஜூன் மாதத்தில் 55 சதவீதமாக கணிசமாக உயர்ந்துள்ளது.
பயணிகளின் விருப்பம்: 35,000 அடிக்கு மேல் பறக்கும்போது இச்சேவையைப் பயன்படுத்திய பயணிகளில்,
86% பேர், வீடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளைப் பார்த்துள்ளனர்.
14% பேர், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பப் பயன்படுத்தியுள்ளனர்.

ஏர் இந்தியாவின் திட்டம் & கட்டணமில்லா சேவை:
வெளிநாடுகளில் விமான வை-பை வசதிக்குக் கணிசமான கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்தியாவில் ஏர் இந்தியா நிறுவனம் இச்சேவையை இலவசமாகவே வழங்குகிறது என ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பயணிகளிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இத்திட்டத்தை மேலும் பல சர்வதேச வழித்தடங்களுக்கும் விரைவில் விரிவாக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

பயணிகளின் முக்கிய கோரிக்கைகள்:
உள்நாட்டு விமானங்களுக்கும் விரிவாக்கம்: வெளிநாடுகளைப் போல இந்தியாவிற்குள்ளேயே இயங்கும் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கும் இந்த வை-பை வசதியை நீடிக்க வேண்டும்.

சென்னையில் இருந்து நேரடி விமானங்கள், தற்போது சென்னையில் இருந்து அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நேரடி ஏர் இந்தியா விமானங்கள் இல்லாததால், தமிழ்நாட்டுப் பயணிகள் டெல்லி, மும்பை வழியாகச் சென்றே இச்சேவையைப் பயன்படுத்த முடிகிறது.

எனவே, சென்னை உள்ளிட்ட தமிழக சர்வதேச விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடி ஏர் இந்தியா விமானங்களை மீண்டும் இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது

MUST READ