Homeசெய்திகள்க்ரைம்கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி கொலை செய்த காதலன் கைது: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி கொலை செய்த காதலன் கைது: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

-

- Advertisement -

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோணசமுத்திரத்தைச் சேர்ந்த கோகிலா (23) என்பவர் திருமணமாகாமல் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், தனது கர்ப்பத்திற்கு அம்மாசி (26) என்பவர்தான் காரணம் என்று கோகிலா சங்ககிரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி கொலை செய்த காதலன் கைது: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

இதனைத் தொடர்ந்து, திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய அம்மாசியுடன் காவல்துறையினர் கோகிலாவை அனுப்பி வைத்துள்ளனர்.

we-r-hiring

இருப்பினும், கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் கோகிலாவை காணவில்லை என அவரது தந்தை கொங்கனாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், வெள்ளாபுரத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சாக்கு மூட்டையில் இருந்து கோகிலா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருமணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காதலன் அம்மாசி அவரைக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் காதலன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

திரைப்படக் காட்சியைப் போலவே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிஜச் சம்பவம்: பாதிரியார் மீது பள்ளி மாணவி பாலியல் புகார் அளித்து பரபரப்பு!

MUST READ