சமயபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் ஜெயராஜ் என்பவரை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமயபுரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பாதிரியாராகவும் பணிபுரிந்து வருபவர் ஜெயராஜ்.

இவர் பள்ளி வளாகத்தில் உள்ள தனி அறைக்கு மாணவியை அழைத்துச் சென்று அவரிடம் அத்துமீறிப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடூரமான அனுபவத்தை மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேள்வியுற்று ஆத்திரமடைந்த கிராம மக்களும் பெற்றோர்களும் உடனடியாகப் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தனித்தனியாகத் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தலைமை ஆசிரியர் மீது புகார்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமை ஆசிரியர் ஜெயராஜைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை அருகே 16 வயது சிறுமிக்குக் கூட்டுப் பாலியல் தொல்லை: 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!
