Homeசெய்திகள்க்ரைம்கும்மிடிப்பூண்டியில் துணிகரம்: கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ₹11 லட்சம் கொள்ளை!

கும்மிடிப்பூண்டியில் துணிகரம்: கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ₹11 லட்சம் கொள்ளை!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம கும்பல், கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் பெட்டியை உடைத்து ரூ.11 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கும்மிடிப்பூண்டியில் துணிகரம்: கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ₹11 லட்சம் கொள்ளை!

கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்றில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் சிலர், தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த கேஸ் வெல்டிங் கருவிகளைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தைக் கச்சிதமாக அறுத்து உடைத்துள்ளனர். தொடர்ந்து, இயந்திரத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் ரொக்கப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

we-r-hiring

இன்று காலை ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள், இயந்திரம் உடைக்கப்பட்டுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினர், கொள்ளை நடந்த ஏடிஎம் மையத்தைப் பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஏடிஎம் மையத்தில் இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்குள் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்துப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் பீதியையும் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிசிடிவியில் ஸ்ப்ரே அடிச்சு கேமை முடிச்ச கொள்ளையன்! தாம்பரம் அருகே விடிய விடிய நடந்த துணிகரம்!

MUST READ