தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் இசக்கியம்மாள், தன் மீது நடந்த கூட்டுப் பாலியல் அநீதி தொடர்பாகத் தன்னிடம் எவ்வித புலன் விசாரணையும் நடத்தாமல், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.சரவணன் குற்றமற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டது குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சட்டமன்றத்தில் காரசார விவாதம் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட புலன் விசாரணையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது எந்தத் தவறும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இசக்கியம்மாளின் கேள்விக்கணைகள் அமைச்சரின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து,
பாதிக்கப்பட்ட தவெக நிர்வாகி இசக்கியம்மாள் தெரிவித்ததாவது: விசாரணையின்றி முடிவு:
“கடந்த மே 31-ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் புகார் அளித்தேன். ஜூன் 1-ஆம் தேதி குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், பாதிக்கப்பட்ட என்னிடம் எந்தவிதப் புலன் விசாரணையும் நடத்தாமல், எந்த அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் நிரபராதி என அறிவிக்கப்பட்டது?
கட்சிப் பதவி சான்று:
என்னை ‘தூத்துக்குடி பெண்’ எனப் பொதுப்படையாகக் கூறியுள்ளனர். நான் சொந்தமாகப் பணம் செலுத்தி தவெக-வின் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறேன்.
புஸ்ஸி ஆனந்த் ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காக எனது சொந்தப் பணத்தில் கட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தவள் நான்.
முக்கிய புகார்கள்: காவல் ஆய்வாளர் எஃப்.ஐ.ஆர்-இல் (FIR) சட்டமன்ற உறுப்பினரின் பெயரைச் சேர்க்கவில்லை என்றாலும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-க்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.சரவணனைக் குற்றவாளியாகச் சேர்த்துள்ளேன்.
கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை என்ன?:
குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர் மீது என்ன நடவடிக்கை? எனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு கொச்சைப்படுத்தியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
முதலமைச்சருக்குக் கோரிக்கைதமக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய அவர், மீண்டும் சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் இந்த வழக்கை நேரடியாகத் தலையிட்டு ஆய்வு செய்து, தமக்கு நியாயமான தீர்ப்பை வழங்கி, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
