Homeசெய்திகள்க்ரைம்திருப்பதி மலைப்பாதையில் பரபரப்பு: 7-வது மைல் அனுமன் சிலையைத் திருடிச் சென்ற மர்ம நபர்! 

திருப்பதி மலைப்பாதையில் பரபரப்பு: 7-வது மைல் அனுமன் சிலையைத் திருடிச் சென்ற மர்ம நபர்! 

-

- Advertisement -

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லும் மலைப்பாதையில் உள்ள பழமையான சிறிய அளவிலான அனுமன் கல் சிலையை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.திருப்பதி மலைப்பாதையில் பரபரப்பு: 7-வது மைல் அனுமன் சிலையைத் திருடிச் சென்ற மர்ம நபர்! திருமலைக்குச் செல்லும் அலிபிரி நடைபாதை மற்றும் மலைப்பாதையில், வாகனங்கள் செல்லும் வழியில் 7-வது மைல் (7th Mile) பகுதியில் அமைந்துள்ள சிறிய அனுமன் கோயிலில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.  நள்ளிரவு நேரத்தில், ஆள் நடமாட்டம் குறைந்த தருணத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அவர், முதலில் சாமி கும்பிடுவது போலப் பாசாங்கு செய்துள்ளார். சுற்றுமுற்றும் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிறிய அளவிலான அனுமன் கல் சிலையை அப்புறப்படுத்தி, எடுத்துச் சென்றுள்ளார்.

திருட்டு அம்பலமானது எப்படி?
வழக்கம்போலக் காலைப் பூஜைக்கு வந்த அர்ச்சகர் மற்றும் ஊழியர்கள், மூலவர் சிலை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்துத் திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அக்கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் வந்த நபர், சாமி கும்பிடுவது போல நடித்துவிட்டு, சிலையைத் திருடிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தன.

we-r-hiring

போலீஸ் விசாரணை தீவிரமாக்கம்
சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபரின் உருவ அமைப்பைக் கொண்டு, திருமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மலைப்பாதையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருமலை மலைப்பாதையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில், இப்படி ஒரு திருட்டுச் சம்பவம் நடந்தது பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பழமையான சிலைகளைக் கடத்தும் கும்பலுக்கும், இந்தத் திருட்டிற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங் மோசடி: 3 அரசு ஊழியர்களிடம் ₹42 லட்சம் சுருட்டல்!

MUST READ