spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின விழா…கோலாகலத்துடன் கொண்டாட்டம்…

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின விழா…கோலாகலத்துடன் கொண்டாட்டம்…

-

- Advertisement -

உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின விழா உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின விழா…கோலாகலத்துடன் கொண்டாட்டம்…இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து உத்திரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள கிண்டன் விமானப் படைத்தளத்தில் விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

விமானப் படை வீரர்கள் கம்பீரமாக நடை போட்ட காட்சியை முப்படை தளபதி அனில் சவான் மற்றும் விமானப் படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஆகியோர் பார்வையிட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது விமானப்படை ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில் வீரர்களின் அணிவகுப்பு அமைந்திருந்தது. விமானப் படை தினத்தை முன்னிட்டு ரஃபேல், மிக் 29 உள்ளிட்ட போர் விமானங்களின் கண்காட்சியும் நடைபெற்றது. விமானப்படை தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!!

we-r-hiring

MUST READ