ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம். 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.ஆசிய தடகளப் போட்டியின் கலப்புத் தொடா் ஓட்டத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்ட கலப்பு பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. 400 மீ தொடா் ஓட்டத்தில் தமிழ்நாட்டை சோ்ந்த சுபா, சந்தோஷ், விஷால் அடங்கிய அணி தங்கம் வென்றது. இந்த அணியில் இடம் பெற்ற இடம் பெற்றிருந்த 4 பேரில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் வென்ற இந்திய அணியில் சுபா வெங்கடேசன், சந்தோஷ், விஷால் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.மேலும், ஆசிய தடகளப் போட்டியில் மும்முனை தாண்டுதலில் பிரவீன் சித்ரவேலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை வாபஸ்…பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!