spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇறுதி சுற்றில் வெல்பவருக்கு ரூ.25.14 கோடி பரிசு…

இறுதி சுற்றில் வெல்பவருக்கு ரூ.25.14 கோடி பரிசு…

-

- Advertisement -

கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையரில் இறுதி போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 2வது ரேங்க் அமெரிக்காவின் கோகோ காப் மோதுகின்றனர்.இறுதி சுற்றில் வெல்பவருக்கு ரூ.25.14 கோடி பரிசு…கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த 2வது அரையிறுதியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் 23 வயது ஜானிக் சின்னர், 6வது ரேங்க் வீரரான செர்பியாவின் 38 வயது ஜோகோவிச் மோதினர்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர் 6-4, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தார். முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதியில் 2வது ரேங்க் வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 8ம் நிலை வீரரான இத்தாலியின் லோரென்சோ முசெட்டி மோதின. இதில் முதல் செட்டை 4-6, என இழந்த அல்காரஸ் அடுத்த 2 செட்டை 7-6, 6-0 என கைப்பற்றினார். 4வது செட்டில் 2-0 என அல்காரஸ் முன்னிலையில் இருந்தபோது காயத்தால் முசெட்டி வெளியேறினார். இதனால் அல்காரஸ் பைனலுக்கு தகுதி.

we-r-hiring

மகளிர் ஒற்றையரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் இறுதி போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 2வது ரேங்க் அமெரிக்காவின் கோகோ காப் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவருக்கு 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளுடன், ரூ.25.14 கோடி பரிசு தொகை வழங்கப்படும்.

காலத்தை வென்ற கலைஞர்…பட்டிமன்ற பேச்சாளர்கள் புகழாரம்…

MUST READ