Homeசெய்திகள்விளையாட்டுகிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!

கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!

-

- Advertisement -

 

கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!
File Photo

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சில விதிகளில் திருத்தங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

“தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது” – விஜயகாந்த்

அதன்படி, மைதானத்தில் நடுவர் சாஃப்ட் சிக்னல் மூலம் அவுட் வழங்கும் நடைமுறை இனி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு பேட்டர் அவுட்டா, இல்லையா என்பதை கள நடுவரால் உறுதிப்படுத்த இயலாவிட்டால், அவர் மூன்றாவது நடுவர் உதவியை நாடுவார்.

அதற்கு முன்பு பேட்டர் அவுட் (அல்லது) நாட் அவுட் என ஏதேனும் ஒரு முடிவை கள நடுவர் அறிவிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. சாஃப்ட் சிக்னல் என அறியப்படும், இந்த முறை தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்ததால், அந்த விதி நீக்கப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசும் போது, பேட்டரை ஒட்டியிருக்கும் பகுதியில் நிற்கும் பீல்டர்கள், விக்கெட் கீப்பர் ஆகியோர் ஹெல்மெட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃப்ரீ ஹிட்டின் போது, ஸ்டெம்பில் பந்து பட்டாலும், பேட்டர்கள் இருவரும் ரன்னுக்காக ஓடலாம் என்றும், அது கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

இந்த விதிமாற்றம் ஜூன் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இது பொருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ