Homeசெய்திகள்விளையாட்டுமற்றொரு ஆட்டத்தில் பெங்களூருVSடெல்லி அணிகள் பலப்பரீட்சை!

மற்றொரு ஆட்டத்தில் பெங்களூருVSடெல்லி அணிகள் பலப்பரீட்சை!

-

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூருVSடெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 60 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 62வது லீக் போட்டி (அதாவது இரண்டாவது போட்டி) நடைபெறுகிறது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 61வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பொறுப்பு கேப்டன் அக்‌ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலுள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 6 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 18 முறையும் டெல்லி அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. இந்த ஆட்டத்தை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் பிளே ஆப் சுற்றில் தகுதி பெற முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
.

MUST READ