Homeசெய்திகள்விளையாட்டுசென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

-

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 60 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 61வது லீக் போட்டி நடைபெறுகிறது. சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் 61வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றனர். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8வெற்றி 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலுள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 6 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலுள்ளது.

இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக சென்னை அணி பந்துவீசவுள்ளது. சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து சொதப்பி வந்த ரஹானே இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஆல் ரவுண்டர் மிட்செல் சாண்ட்னருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாலர் தீக்‌ஷனா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

MUST READ