Homeசெய்திகள்விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 24வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 24வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கையும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக ராஜஸ்தான் அணி பெங்களூர் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் குஜராத் அணியை பொறுத்தவரையில், இதுவரை மொத்தம் 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 5 போட்டிகளில் இரண்டில் வெற்றியும், மூன்றில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரை கடைசியாக பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடதக்கது. கடந்த போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் யாஷ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

MUST READ