Homeசெய்திகள்விளையாட்டுவெளியானது ஐபிஎல் அட்டவனை - முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு மோதல்!

வெளியானது ஐபிஎல் அட்டவனை – முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு மோதல்!

-

சென்னை அணியை சமாளிக்குமா நடப்பு சாம்பியன் குஜராத்!

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவனை வெளியாகியுள்ள நிலையில், முதல் லீக் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

டாடா ஐபில் 2024க்கான அட்டவனையை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக 21 போட்டிகளுக்கான கால அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2ம் கட்ட அட்டவணை வெளியாகும் என கூறப்படுகிறது. வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாஃப் டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மார்ச் 23ம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் பஞ்சாம் மற்றும் டெல்லி அணிகளும், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளும் மோதவுள்ளன. அடுத்தடுத்த போட்டிகள் முறையே, ராஜஸ்தான் – லக்னோ, குஜராத்-மும்பை, பெங்களூரு-பஞ்சாப், சென்னை-குஜராத், ஐதராபாத்-மும்பை ஆகிய போட்டிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. இதுவரை ஏப்ரல் 07ம் தேதி வரை நடைபெறவுள்ள லீக் போட்டிகளுக்கான அட்டவனை வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டவாது கட்ட அட்டவனை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ