spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லியை வென்று மகுடன் சூடியது பெங்களூரு அணி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லியை வென்று மகுடன் சூடியது பெங்களூரு அணி!

-

- Advertisement -

 

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லியை வென்று மகுடன் சூடியது பெங்களூரு அணி!

we-r-hiring

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி மகுடம் சூடியுள்ளது.

‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

‘ஈ சாலா கப் நமதே’ என்ற பெங்களூரு ரசிகர்களின் தாரக மந்திரம் நிறைவேறியுள்ளது. டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், பெங்களூரு, டெல்லி அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய டெல்லி அணி, 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது.

தவெக தலைவராக கேரள மக்களை சந்திக்கும் விஜய்!

இதையடுத்து, 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று, கோப்பையைத் தட்டி சென்றது. இதன் மூலம் முதன் முறையாக பெங்களூரு அணி மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.

MUST READ