Homeசெய்திகள்தமிழ்நாடுஅன்பில் மகேஷ் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல! நெடுஞ்சாலைத்துறையில் விரைவில் வெள்ளை அறிக்கை – அமைச்சர்...

அன்பில் மகேஷ் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல! நெடுஞ்சாலைத்துறையில் விரைவில் வெள்ளை அறிக்கை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதில் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும், ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.அன்பில் மகேஷ் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல! நெடுஞ்சாலைத்துறையில் விரைவில் வெள்ளை அறிக்கை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

மேலும், நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் டெண்டர் முறைகேடுகள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

we-r-hiring

ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை

மாமல்லபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பதவிக்காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினார்.

அவை தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையிலேயே தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை தேர்தல் அரசியலுக்காகவோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலிலேயே அன்பில் மகேஷ் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் என்றும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலைத்துறையில் ரூ.2,000 கோடி டெண்டர்?

நெடுஞ்சாலைகளில் பேட்ச் ஒர்க் எனப்படும் சாலைப் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக மட்டும் ரூ.2,000 கோடி மதிப்பில் டெண்டர்கள் விடப்பட்டதாகவும், இதில் பலருக்குப் பணம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் அவசர அவசரமாகப் பல்வேறு டெண்டர்கள் விடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்து அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.

நெடுஞ்சாலைத்துறைக்கு விரைவில் வெள்ளை அறிக்கை

நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் டெண்டர் முறைகேடுகள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, விரைவில் அத்துறையின் செயல்பாடுகள் மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

நெடுஞ்சாலைத்துறை மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் அமைச்சர்கள் பல்வேறு வழிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்து, ஊழல் தொடர்பான விவரங்களைத் துறைவாரியாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

“மக்கள் பணத்தைத் தொட மாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்”

கடந்த திமுக ஆட்சியிலும் முந்தைய ஆட்சியாளர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், பின்னர் சம்பந்தப்பட்டவர்களுடன் சமரசம் செய்யப்பட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.

ஆனால், தற்போதைய அரசு அந்த வழியில் செயல்படாது என்று தெரிவித்த அவர், “மக்கள் பணத்தைத் தொட மாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்” என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வருவதாகக் கூறினார்.

அன்பில் மகேஷ் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்றும், ஊழல் தொடர்பான புகார்கள் மீது ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீண்டும் வலியுறுத்தினார்.

கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? – அன்பில் மகேஷிடம் கேட்ட டீட்டா சரவணன்!

MUST READ