Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.... அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

-

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண வரும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் வருவதும், அண்ணாமலையாரை வழிபட்டு தீபத்தை வணங்குவதும் என்பது போன்றவை தெய்வீக அனுபவத்தை உண்டாக்கும்.திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.... அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

லட்சக்கணக்கான பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக வருடந்தோறும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா நவம்பர் 17 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளான பரணி தீபம் ஏற்றுதல், மகாதீபம் ஏற்றுதல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண வரும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

எனவே இந்த நிகழ்வை காண வரும் பக்தர்களுக்காக கோவையில் இருந்தும், நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை போன்ற தென் மாவட்டங்களில் இருந்தும் 24,25,26 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 25,26,27 தேதிகளில் சென்னை-திருவண்ணாமலை இடையே 50 குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ