Homeசெய்திகள்தமிழ்நாடுசமத்துவத்தை வலியுறுத்தும் திமுக தொடர்ந்து நலத்திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது - மனோ தங்கராஜ்!

சமத்துவத்தை வலியுறுத்தும் திமுக தொடர்ந்து நலத்திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது – மனோ தங்கராஜ்!

-

சமத்துவத்தை வலியுறுத்தும் திமுக தொடர்ந்து நலத்திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில்,, “இந்தியாவில் 40% க்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு 298 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள். ஆனால் கோடீஸ்வரர்களின் வருவாய் உயர்ந்து கொண்டே வருகிறது.இது பிரதமர் மோடி அவர்களுக்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வெட்கம் இல்லையா? மோடிஅரசு கார்ப்பரேட் வரியை 2019 – ல் 30% லிருந்து 22% ஆக குறைத்தது, இது இரண்டு ஆண்டுகளில் அரசிற்கு 1.84 லட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்பபடுத்தியது. இந்தத் தொகை 2020-21 ஆம் ஆண்டில் MGNREGA மற்றும் NFSA ஆகிய இரண்டு திட்டங்களுக்கான பட்ஜெட்டுகளை விட அதிகமானது.

இந்தியாவின் முதல் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு வரலாற்று உச்சத்தில் உள்ளது, இது பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இருந்த அளவை விட அதிகம். 0.001% மேல் தட்டு மக்கள் (10 ஆயிரத்திற்கும் குறைவான நபர்கள்) 50% கீழ் தட்டு மக்களை விட மூன்று மடங்கு அதிக சொத்து வைத்துள்ளனர். இந்த இடைவெளியை குறைக்க வேண்டும் எனபதற்காக தான் சமத்துவத்தை வலியுறுத்தும் திமுக தொடர்ந்து நலத்திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது என்ற உண்மை இப்போதாவது புரிகிறதா?. என இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

 

MUST READ