Homeசெய்திகள்தமிழ்நாடுஎல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது - புழல் சிறையில் அடைப்பு!

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது – புழல் சிறையில் அடைப்பு!

-

- Advertisement -

நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

we-r-hiring

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வபோது கைது செய்வது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில், இந்திய எல்லைக்குள் வந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். நாகை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரும் நாகை வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இலங்கை மீனவர்கள் 14 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்ற தலைமை மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து 14 பேரும் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

MUST READ